ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அத்துடன், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை , ஏப்ரல் 2 முதல் 15-ம் தேதி வரை விலையின்றி வழங்கப்படுகிறது.
மக்கள் கூட்டம் இன்றி சுழற்சி முறையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், 3-ம் தேதி வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்றபோதும் அன்றைய தினமும் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
அன்றைய தினம் வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் கூட்டத்தை தவிப்பதர்காக தனித்தனியாக டோக்கன் வழங்கப்படுகிறது. நாள், நேரம் ஆகியவை குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்படுவதால் கூட்டம் சேர வாய்ப்பு இல்லை என்றும், குறிப்பிடப்பட்ட நேரத்தில் சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.